Total Pageviews

Monday, July 30, 2012

ஆமை புகுந்த வீடு????




"ஆமை ஒரு வீட்டிற்குள் புகுந்துவிட்டால் அந்த வீடு உருப்படாமல் போய்விடும்." என்று இந்த பழமொழிக்குப் பொருள் கொண்டு "ஆமை"யின் மேல் ஒரு "துரதிருஷ்டசாலி" என்னும் பழியையும் சேர்த்துப் போடுகின்றனர் நம் மக்கள்.




இக்கருத்து சரியாகுமா?. இல்லை. ஆமை அப்படி என்னதான் தவறு செய்தது? நாம் ஏன் அதன் மேல் வீண்பழி போட வேண்டும்?. நீர்நிலைகளில் வசிக்கும் இயல்புடைய ஆமை நமது வீட்டிற்கு ஏன் வர வேண்டும்?. சரி தவறுதலாக எப்படியோ ஒரு ஆமை நமது வீட்டிற்குள் புகுந்து விட்டால் எப்படி அந்த வீடு உருப்படாமல் போகும்?. மாறாக, ஆமை வீட்டிற்குள் புகுந்தால் உங்கள் வீட்டிற்கு இலக்குமி (திருமகள்) வரப்போகிறாள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். ஏனென்றால் ஆமை திருமாலின் அருள் பெற்ற ஒரு உயிரினம் ஆகும். திருமாலின் பத்து அவதாரங்களில் ஒன்றல்லவா இந்த ஆமை அவதாரம். திருமால் இருக்கும் இடம் தானே திருமகள் வாசம் செய்யும் இடம். எனவே இந்த தவறான கருத்தை இன்றோடு கைவிடுங்கள்.

அப்படி என்றால் இந்தப் பழமொழியின் உண்மையான பொருள் என்ன?. வழக்கம் போல சொல் பிழைகளால் இந்தப் பழமொழியில் பொருள் மாறுபாடு அடைந்துள்ளது. தூய செந்தமிழ்ச் சொற்கள் கொச்சை வழக்கில் எப்படி எல்லாம் மாறுபாடு அடைகின்றன என்பதற்கு இந்தப் பழமொழியும் ஒரு எடுத்துக்காட்டு ஆகும்.

உங்களுக்குக் காளானைப் பற்றித் தெரியும். புழுத்துப்போன மரம், மாட்டுச்சாணம், வைக்கோல் முதலான பொருட்களில் இருந்து சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் தானாகத் தோன்றும் ஒரு வகைப் பூஞ்சை தான் இது. இருட்டும் ஈரப்பதமும் காளான் தோன்றுவதற்கு ஏற்ற சூழ்நிலைகள். எப்போதுமே இருளாகவும் ஈரமாகவும் மக்கிப்போன பழைய மரங்களுடன் இருக்கும் வீட்டில் காளான் இயல்பாகவே தோன்றும். இது போன்ற வீட்டில் குடி இருப்பவர்கள் உடல்நலத்துடன் இருக்க முடியுமா?. முடியவே முடியாது. ஏனென்றால் இந்தச் சூழ்நிலையில் வசிக்கும் மனிதர்களுக்கு காசநோய், மனநோய், சருமநோய் முதலான பல நோய்கள் தொற்றிக் கொள்ளும். கதிரவனின் ஒளியும் வெப்பமும் இல்லாத வீட்டிற்கு வெளியாட்களும் வர விரும்ப மாட்டார்கள். எனவே இது மாதிரி வீட்டில் வசிப்பவர்கள் கவனிப்பார் யாருமின்றி நோய்வாய்ப்பட்டு மரணத்தைத் தேடிக்கொள்வர். ஆக மொத்தத்தில் காளான் பூத்த இந்த வீடு உருப்படாமலேயே போய்விடும். இதைத்தான் இந்த பழமொழியும் கூறுகிறது. சரியான பழமொழி இது தான் :-


(ஆம்பி = காளான்)






ஆம்பி பூத்த > ஆமி பூத்த > ஆமெ பூத்த > ஆமெ பூந்த > ஆமை புகுந்த



இதில் உள்ள தூய தமிழ்ச்சொற்களான 'ஆம்பி பூத்த' என்பன கொச்சைச் சொற்களாக மாறி பின்னர் உருமாறி இறுதியில் மீண்டும் தூய தமிழ் வடிவம் பெற்று இவ்வாறு நிற்கிறது. 

தற்போதைய சூழ்நிலையில், ஆமை புகுந்த வீடு உருப்படாது எனும் பழமொழிக்குப் பலப் பொருள்கள் சொல்லப்படுகின்றன. அதாவது, கல்லாமை, அறியாமை, பொறாமை போன்ற ஆமை என்ற ஈற்றில் முற்றுப்பெறும் சொற்கள் நிறைந்திருக்கும் இல்லங்கள் முன்னேறுவது கடினம் எனச்சொல்வதும் உண்டு....இருப்பினும், 





"ஆம்பி பூத்த வீடு உருப்படாது."



என்பதே இதனுடைய உண்மையான அர்த்தம்...

Wednesday, July 18, 2012

கடவுள் பொம்மை










மதியம் மூன்று மணி ஆகியிருந்தது. கழுத்தில் கிடந்த அந்த அழுக்குத்துண்டால் முகத்தைத் துடைத்தவாறேக் கூவிக் கூவி கடவுள்களை விற்றுக் கொண்டிருந்தான் அந்த தள்ளு வண்டிக்காரன். அவ்வப்போது வறண்டு விடும் தொண்டையை அழுக்காயும் பழுப்பாயும் உள்ள பாட்டிலைத் திறந்து வீட்டிலிருந்து கொண்டு வந்த உப்புத் தண்ணீரால் ஈரப்படுத்தி ஒட்ட வைத்துக் கொள்வான்.




சிறியது, நடுத்தரம், பெரியது என்று பணத்துக்குத் தக்க அளவில் அவனிடம் கடவுள்கள் இருந்தனர். அவனது தள்ளு வண்டியில் எல்லாக் கடவுள்களும் இருந்தனர். ஒரு அடி அளவுள்ள பிள்ளையார் பொம்மை இருபத்தி ஐந்து ரூபாய் என்றால் அதே அளவுள்ள ஏசுநாதர் பொம்மையும் அதே விலைதான். அவனுக்கு எந்த சாமியும் உசத்தி இல்லை எந்த சாமியும் தாழ்ச்சி இல்லை.





துண்டால் முகத்தை துடைத்துக் கொண்டே அவன் வண்டியைத் தள்ளிய ஏதோ ஒரு புள்ளியில் ஒரு சின்னப் பள்ளத்தில் வண்டி இறங்கி ஏறியது. அப்போது ஏற்பட்ட ஒரு சின்ன குலுக்கலில் ஒரு கடவுள் பொம்மைக்கு உயிர் வந்து விட்டது.




" என்ன முத்து, எப்படிப் போகுது பொழப்பு?”





“ அத ஏன் கேக்குற சாமி? நாய் படாத பொழப்பு. நாலு பேரோட வயித்த ஒரு வேல நனைக்கறதுக்குதான் இப்படி நாயா பேயா வெயில்லுன்னு பார்க்காம மழைன்னு பார்க்காம அலைஞ்சு தேய வேண்டியிருக்கு” என்று புலம்பிக் கொண்டே போனவன் கொஞ்சம் சுதாரித்தவனாக ,” "ஆமாம் தெரியாமத்தான் கேக்குறேன் ஏம் பொழப்பு எப்படிப் போகுதுன்னுகூடத் தெரியலன்னா அப்புறம் நீயெல்லாம் என்ன சாமி?”





“ நூத்துக்கணக்கான வருஷம் தவம் இருந்த ஆனானப் பட்ட முனிவர்களே நான் முன்னாடிப் போய் நின்னு என்ன வரம் வேணும்னு கேட்டா எப்படிப் பதறிப் போய் குரல் நடுங்க யாசிப்பாங்கத் தெரியுமா? நீ என்னடான்னா கொஞ்சம் கூட பதட்டமே இல்லாம சர்வ அலட்சியமாப் பேசற”




“ அட போ சாமி, அவங்களுக்கெல்லாம் ஓங்கிட்ட ஏதோ ஒரு வரம் தேவப் பட்டிருக்கும். அதனால ஒங்கிட்ட வளஞ்சு குனிஞ்சு கூழக் கும்பிடு போட்டிருப்பாங்க. எனக்கு உன்னிடம் எதுவும் தேவை இல்ல. , புயலோ, மழையோ, வெயிலோ நாயா பேயா ஒழைக்கிறேன். ஒழப்புக்கான கூலியத் தவிர வேற எதையும் நான் எதிர்பார்க்குறது இல்ல. அதனாலதான் இந்த அசால்ட்டும் திமிரும்”





கடவுள் ஒரு கனம் அப்படியே ஆடிப் போனார். ஆக, உழைக்காம எதிர்பார்க்குற பணக்காரனிடம் தான் தனது ஜம்பம் பலிக்கும் என்பதும் உழைப்புக்கான நியாயமான கூலியை மட்டுமே எதிர்பார்க்கும் வேர்வைக்காரனிடம் எதுவும் நடக்காது என்பதும் புரிந்து போக மௌனமானார் கடவுள்.





கொஞ்ச நேரம் இப்படியே மௌனமாக கடந்தது. வீடுகளே இல்லாத பகுதியாக இருந்ததால் .அவனுக்கு கூவ வேண்டிய அவசியம் இல்லாமல் போனது. கூவிக்கொண்டே இருந்த வாயை எவ்வளவு நேரம்தான் சும்மா வைத்திருப்பான்? மெல்ல ஆரம்பித்தான்.





“ஏஞ்சாமி என்ன இப்படி படச்ச?”





கேள்வியின் வில்லங்கம் புரியாத கடவுள் “எப்படி?” என்று அப்பாவியாய் கேட்டார்.





“ ஒன்னும் தெரியாத அப்பாவியாட்டம் கேளு. அவுங்கள மாடி மேல மாடி வீட்டிலும் எங்கள ப்ளாட் ஃபாரத்திலும் ஏம்பா படச்ச?”





என்ன சொன்னாலும் சிக்கிக் கொள்வோம் என்பது புரியாமல் எதையாவது சொல்லி சிக்கிக் கொள்ள கடவுள் என்ன மன்மோஹன்சிங்கா? " நான் எங்கடா முத்து உங்கள படைச்சேன்? நீதானடா எங்களை எல்லாம் படைச்சு இப்படி இந்த தள்ளு வண்டியில போட்டு இந்த வேகாத வெயில்ல தள்ளிட்டுப் போற..”





“ என்னோட பொழப்பப் பாத்தா ஒனக்குக் கூட நக்கலா இருக்குல்ல. படைக்கிற அளவுக்குத் துப்பு இருந்தா நான் ஏஞ்சாமி இந்த மொரட்டு வெயில்ல கெடச்ச தேஞ்சுப் போன ரெண்டு சோத்தாங்கால் செருப்பையே ரெண்டு கால்லயும் மாட்டிக்கிட்டு லோலு படறேன்..” என்று சொல்லிக் கொண்டே போனவன் எதிர்த்தத் திசையில் இருந்து டி.வி. எஸ் சில் வந்த தம்பதியர் இவனை நிற்கச் சொல்லி கைகாட்டிக் கொண்டே அவர்களது வண்டியை ஓரங்கட்டவே “ செத்த பொறு சாமி கிராக்கி ஒன்னு வருது . முடிச்சிட்டு வந்துடறேன்” என்றவாறே அவர்களை எதிர் கொள்ளத் தயாரானான்.





ஏனோ தெரியவில்லை அந்தப் பெண்ணிற்கு இவனோடு பேசிக் கொண்டு வந்த அந்த பொம்மையைப் பிடித்துப் போயிற்று. கையிலெடுத்து புரட்டிப் பார்த்துக் கொண்டே " இது எவ்வளவு?” என்று கேட்டாள்.





எங்கே தன்னை விற்றுவிடுவானோ என்ற பயம் அந்தப் பொம்மைக் கடவுளைத் தொற்றிக் கொண்டது.





“ அது வேணாம்மா. "டேமேஜ்" ஆனது. வேற எதையாவது நல்லதா எடுங்கம்மா” என்றவன் அந்தப் பொம்மையை வாங்கி ஒரு ஓரமாய் வைத்தான்.





தன்னை அவசரமாய் விற்காமல் இருந்தமைக்காக ,அவர்கள் இருவருக்கும் தெரியாத வகையில் ஒரு புன்னகையால் அவனுக்கு நன்றி சொன்ன அந்தக் கடவுளை நோக்கி “ எதையாச்சும் ஒளறி காரியத்தக் கெடுத்துடாத, இந்த வியாபாரத்த முடிச்சுட்டு வந்துடறேன்” என்று அவர்களுத் தெரியாத வகையிலேயே இவனும் அவரை நோக்கி புன்னகைத்து வைத்தான்.











அதை எடுத்து இதை எடுத்து அப்படியும் இப்படியுமாய் உருட்டிப் பார்த்து இறுதியாய் ஒன்றை எடுத்து அறுபது சொல்லி நாற்பதுக்கு இழுத்து வந்த அவர்களது சாமர்த்தியத்தை அவர்களே ரசித்தவாறு நகரத் தொடங்கினர் அந்தத் தம்பதியர். போகும் போதும் அந்தப் பெண் அந்த பொம்மையை மீண்டும் கையிலெடுத்துப் பார்த்தாள்.





“ அதுதான் நல்ல சரக்கில்லன்னு சொன்னேனேம்மா. அதப் போடு”





“ இல்லப்பா அது என்னமோ தெரியல இருக்கிற சாமியிலேயே இந்த சாமிதான் உயிர்ப்போட இருக்கிற மாதிரித் தெரியுது.” என்றவளிடமிருந்து அந்தப் பொம்மையை நாசுக்காக வாங்கி வண்டியில் போட்டவன், “ உங்களுக்கு நல்லது சொன்னாப் புரியாதும்மா. நாளைப்பின்ன உங்க கிட்ட நான் தொழில் பாக்குறதா வேண்டாமா?” என்றான்.





“ அதுதான் ஓடஞ்ச பொம்மங்கிறாப்புல இல்ல. வச்சிட்டுப் பேசாம வாயேன்” என்று அவளது கணவர் சலிக்கவே அந்தப் பெண் தங்களது வண்டி நோக்கி நகர்ந்தார். வண்டியில் ஏறி அமர்ந்த பின்பும் அந்த பொம்மையின் மீது அவளது கண் இருந்ததை முத்து கவனிக்கவே செய்தான்.





அப்பாடா என்றிருந்தது முத்துக்கு. எங்கே தனக்கு வாய்த்தப் பேச்சுத் துணையைப் பறித்துக் கொண்டு போய்விடுவாளோ என்று ஒரு கணம் ஆடித்தான் போனான்.





” தேங்க்ஸ் எ லாட் முத்து”





“ என்ன சாமி கான்வெண்ட்டுல படிச்ச தொர வீட்டுப் புள்ள மாதிரி இங்க்லீசெல்லாம்” பேசற.





” எல்லா பாஷையும் நமக்கு ஒன்னுதானேப்பா”





“ அப்ப ஒனக்கு எல்லா பாஷையும் தெரியுமா?”





“ஆமா! பின்னத் தெரியாம?”





“ இல்ல அப்ப ஒனக்கு தமிழ் தெரியுமா?”





“ லூசாடா முத்து நீ. இவ்வளவு நேரம் நாம தமிழ்தான பேசினோம்”





“ஆமாம் ஆமாம் நாந்தான் ஏதோ கிறுக்குத் தனமா பேசிட்டேன். அப்புறம் ஏன் சாமி தமிழ் ல சாமி கும்பிடக் கூடாதுங்கறாங்க?”





“ நான் எப்பவாச்சும் அப்படி சொன்னேனாடா? அது மட்டுமல்லடா முத்து, அப்பனுக்கே க்ளாஸ் எடுத்த முருகனுக்கே பாடம் நடத்திய அவ்வையோட ஊருடா இது. அப்பேர் பட்ட முருகனையே அசால்ட்டாப் பார்த்து ஒன்னோட தத்துவம் பிழை என்றால் அதை சொல்ல என் தமிழுக்கு உரிமை உண்டு என்று சொன்னாளேடா கிழவி. அவ்வளவு கம்பீரமான மொழிடா தமிழ்”





“ அவ்ளோ கிரேடா சாமி தமிழுக்கு”





“இல்லையாடா பின்ன. இந்த மொழியை ரசிக்கத் தானேடா சிவனே நக்கீரனை சீண்டிப் பார்த்தார்”





“ அப்புறம் ஏன் சாமி பல பள்ளிக் கூடத்துல ‘அம்மா’ன்னு கூப்பிட்டாலே புள்ளைங்கள முட்டிக்கால் போட வைக்கிறாங்க?”





“ அந்தப் பள்ளிக் கூடங்களிக்கு ஏண்டா புள்ளைங்கள அனுப்புறீங்க?”





“ அதுவும் சரிதான் சாமி”





இப்படியான பேச்சுக்கு இடையே இரண்டு மூன்று பொம்மைகளை விற்றிருந்தான். ஒரு லாரி ஓட்டுநரிடம் பேசும் போது 'ப்ளாஸ்டர் ஆஃப் பாரிஸ்'


விலையேற்றம் குறித்து முத்து பேசியிருந்தான்.





“அது என்னடா 'ப்ளாஸ்டர் ஆஃப் பாரிஸ்?'





” அது ஒரு வகையான ரசாயனக் களி மண் சாமி”





“ உங்க ஊருல களி மண்ணு தீர்ந்து போச்சாப்பா? பேசாம அதுலேயே செய்யலாமே?”




“ இந்த ஷைனிங் கிடைக்காது சாமி”





“ இல்ல எங்களில் சிலரை தண்ணீல போடறப்ப கறையாம மீனெல்லாம் செத்துப் போகுதாமே? பேசாம களி மண்ணுல செஞ்சா மீனெல்லாம் பிழைக்குமே முத்து”





" நான் பிழைக்க வேணாமா சாமி. இந்த நவீன காலத்துல களி மண்ணு சாமியெல்லாம் யாரு வாங்குவா சாமி?. அது மட்டுமல்ல ' ப்ளாஸ்டர் ஆஃப் பாரிஸ்ல ' செஞ்சாத் தான் உன்ன செஞ்ச திருப்தியே வருது சாமி”





“பார்த்தாயா முத்து, நீயே வசமா வந்து ஒத்துக்கிட்ட பார்த்தாயா. அப்ப நீதான எங்களப் படச்சது?





”அது என்னவோ நெசந்தான் சாமி. ஆனா உன்னப் படைக்கிறதுக்காக என்னப் படச்சது நீதானே சாமி?”





"கடவுள் மீண்டும் பொம்மையாய்ப் போனார்"






Monday, July 16, 2012






நண்பர்களே! நாளை(17-07-2012) செவ்வாய்க்கிழமை காலை 7 மணியளவில் நெல்லை வானொலி நிலையத்தின் மருத்துவமலர் நிகழ்ச்சியில் யோகயுவகேந்திராவின் "யோகமருத்துவம்" நிகழ்ச்சியைக் கேட்கத் தவறாதீர்கள்

Thursday, July 12, 2012

அமெரிக்காவும் நமது தேசம்தான்.......






அமெரிக்காவும் நமது தேசம்தான் – ஆதாரத்துடன் விளக்கம்

"அச்வமேதா யாகத்திற்க்கானக் குதிரையைத் தேடி ஸாகரர்கள் பாதாளத்தை வெட்டிக்கொண்டே போனார்கள். அப்போது உண்டான கடலே ‘ஸாகர’மாயிற்று.கடைசியில் கபில மகரிஷி ஆஸ்ரமத்திற்குப் பக்கத்தில் குதிரையைக் கண்டார்கள்.அவரே குதிரையை அபகரித்ததாக எண்ணி அவரை இம்சித்தார்கள்.அவரோ ஸாகரர்களைத் தனது திருஷ்டியினால் பொசுக்கி சாம்பலாக்கினார்."- இது ராமாயணக்கதை.


நம் தேசத்துக்கு நேர் கீழே உள்ள அமெரிக்காவை பாதாளம் என்று வைத்துக் கொண்டால் அங்கேயிருக்கும் கபிலாரண்யம்(மதுரை என்பது மருதை என்று மாறியது போல)கபிலாரண்யமே-
கலிபோர்னியாவாக இருக்கலாம்.அதற்குப் பக்கத்தில் குதிரைத்தீவு(Horse Island),சாம்பல் தீவு(Ash Island) இவை உள்ளன.

ஸகரர், ஸாகரம் பற்றி இன்னொன்றும் தோன்றுகிறது.ஸகாரா பாலைவனமும் ஒரு காலத்தில் கடலாக இருந்தது என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.ஸாகரம் தான் ஸகாராவாயிற்றோ என்று தோன்றுகிறது. 

கபிலர் மகரிஷியின் ஆசிரமம்தான் இன்றைய கலிபோர்னியாவா?

ஆதாரம்:தெய்வத்தின் குரல் பாகம்-१.காஞ்சிப்பரமாச்சியார் அவர்கள் பக்கம் 168-169 

(ஒபாமா அடிக்கவந்தால் ...............நான் பொறுப்பல்ல)

போதயனார் எனும் பிதாகரஸ்






கணித தேர்விற்காக பிதாகரஸ் தேற்றத்தை மனப்பாடம் செய்து கொண்டிருந்தாள் அமிர்தா. …


இதை கேட்டபடியே உள்ள வந்து கொண்டிருந்த அமிர்தாவின் தாத்தா இரத்தினம், “என்னம்மா பிதாகரஸ் தேற்றத்தை மனப்பாடம் செய்கிறாயா?” என்றார்.

”ஆமாம் தாத்தா. ரொம்ப கடினமா இருக்கு, இதை எப்படித்தான் கண்டுபிடிச்சாங்களோ!” என்றாள்.

இரத்தினம் தாத்தா: “இந்த தேற்றம் கி.மு 500ல் பிதாகரஸ் என்ற கணித அறிஞர் தொகுத்தார், அதனால் “பிதாகரஸ் தேற்றம்” என்று பெயர் வந்தது. ஆனால் அதுக்கும் முந்தியே நம்ம தமிழ் அறிவியலாளர்கள் அதை பாட்டாவே சொல்லிருக்காங்க தெரியுமா”

அமிர்தா: “சும்மா பொய் சொல்லாதீங்க தாத்தா”

இரத்தினம் தாத்தா: “சொல்றேன் கேள், இன்றைக்கு நாம் அனைவரும் சொல்லிக்கொண்டிருக்கின்ற பிதாகரஸ் கோட்பாடு (Pythagoras Theorem) என்ற கணித முறையை, பிதாகரஸ் என்பவர் கண்டறிவதற்கு முன்னரே, போதயனார் என்னும் புலவர் தனது செய்யுளிலே சொல்லியிருக்கிறார்.

“ஓடும் நீளம் தனை ஒரேஎட்டுக்
கூறு ஆக்கி கூறிலே ஒன்றைத்
தள்ளி குன்றத்தில் பாதியாய்ச் சேர்த்தால்
வருவது கர்ணம் தானே” – போதையனார்













விளக்கம்: இவற்றின் பொருள் செங்கோண முக்கோணத்தின், நீளத்தில் (அடிப்பாகம்) 8 பங்கில் ஒன்றைக் கழித்துவிட்டு உயரத்தில் பாதியை எடுத்து கூட்டினால் வரும் நீள அளவே கர்ணம் என்பதாகும். இவ்வளவு எளிமையாக கர்ணத்தின் நீளம் காணும் வாய்ப்பட்டை விட்டுவிட்டு வர்க்கமூலம், பெருக்கல் என பிதார்கரஸ் தியரம் சொல்லிவருவதை நாம் பயன்படுத்துகிறோம் இன்று. இக்கணித முறையைக் கொண்டுதான், அக்காலத்தில் குன்றுகளின் உயரம் மற்றும் உயரமான இடத்தை அடைய நாம் நடந்து செல்லவேண்டிய தூரம் போன்றவைகள் கணக்கிடப்பட்டுள்ளன.



போதயனார் கோட்பாட்டின் சிறப்பம்சம் என்னவென்றால், வர்க்கமூலம் அதாவது Square root இல்லாமலேயே, நம்மால் இந்த கணிதமுறையை பயன்படுத்த முடியும். தமிழன் ஒரு வேலை கற்றலையும் / கல்வியையும் பொதுவுடமையாக, உலகறியச் செய்து இருந்தால் …. அவர்கள் தரணி எங்கும் அறியப்பட்டு இருப்பார்கள்.” என்றார்.

அமிர்தா: “தாத்தா இது ரொம்ப எளிதாக இருக்கு, இதை படிச்சாலே நான் எளிதாக தேர்வில் எழுதி முழு மதிப்பெண்ணும் வாங்கிடுவேன். ரொம்ப நன்றி தாத்தா” என்றாள். நாமும் நம்மிடையே உள்ள சிறப்புகளை, எடுத்துரைத்தால் இன்றைய மாணவர்களும் எளிதில் தேர்ச்சி பெறுவார்கள் என்பது திண்ணம்.

சித்தர்பாடல்களைப்பற்றிச் சிந்திப்பார்களா நம் ஆசிரியர்கள்????

ஹீமோகுளோபின் அதிகரிக்க.....







ஹீமோகுளோபின் உடலில் அதிகரிக்க எளிய வழி--உணவே மருந்து,




உடலில் ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி இருக்கிறது. நாட்டு மருந்து கடைகளில் கருப்பு உலர்ந்த திராட்சை பழம் கிடைக்கும். அவற்றை வாங்கி 72 நல்ல கருப்பு உலர்ந்த திராட்சை பழங்களை எடுத்துக் கொள்ளுங்கள்.

ஒரு டம்ளரில் தண்ணீர் நிறைய எடுத்துக் கொண்டு, அதில் முதல் நாள் மூன்று பழங்களை மாலை 6 மணிக்கு நீரில் போட்டு இரவு முழுவதும் ஊறவிடுங்கள். காலையில் 6 மணிக்கு பல் துலக்கி விட்டு, காலை ஒரு பழத்தை தின்றுவிட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள்.

பிறகு மதியம் 12 மணிக்கு ஒரு பழத்தை தின்றுவிட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள். மாலை 6 மணிக்கு கடைசியாக உள்ள பழத்தை தின்றுவிட்டு மீதியுள்ள நீரை குடியுங்கள்.

இதே மாதிரி கீழே உள்ள பட்டியலில் குறிப்பிட்டபடி பழங்களை தின்றுவிட்டு, பழம் ஊறிய நீரை குடியுங்கள்.
ஒன்பது நாட்கள் காலை 6 மணி மதியம் 12 மணி மாலை 6 மணி மொத்தம் பழங்கள் 1வது நாள் 1 1 1 3 பழங்கள்.2வது நாள் 2 2 2 6 பழங்கள்.3வது நாள் 3 3 3 9பழங்கள். 4வது நாள் 4 4 4 12 பழங்கள்.5வது நாள் 4 4 4 12 பழங்கள்.6வது நாள் 4 4 4 12 பழங்கள்.7வது நாள் 3 3 3 9 பழங்கள்.8வது நாள் 2 2 2 6 9வது நாள் 1 1 1 3பழங்கள்ஒன்பது நாட்கள் செய்து முடித்த பிறகு, ரத்தத்தில் ஹீமோகுளோபின் பரிசோதித்துப் பாருங்கள்.

தேவையானால் மறுபடியும் ஒரு தடவை பட்டியலில் குறிப்பிட்டபடி செய்து பாருங்கள். இப்பொழுது உங்கள் ரத்தத்தில் ஹீமோகுளாபின்கள் திருப்தியான அளவில் உயர்ந்து இருக்கும். இந்த ஹீமோகுளாபின் உயர்வு நமக்கு பல வியாதிகளை வராமல் தடுக்கும். உடலில் உற்சாகம் பெருகும். வலிவோடும், வனப்போடும் உடல் மிளிரும். இப்படி செய்து அருந்தும் கருப்பு திராட்சை ஊறிய நீர், ரத்தத்தில் கலந்து ஹீமோகுளோபின்கள் உருவாக காரணமாக இருக்கும். செலவு அதிகமில்லாத இந்த எளிய வழியால் உடலில் இழந்த சக்தியையும், உற்சாகத்தையும் நாம் பெறலாம்.





வலியும்,வழியும்





அழுகாமல் "நான்" பிறந்திருந்தால்
அன்றோடு முடிந்திருககும்
அழுகையின் அத்தியாயங்கள்

உலுக்கி எடுத்த உடல் வலி
பிறந்ததும் வீரிட்டு அழுதேன்
அழுகையின் அடுத்தடுத்த
அத்தியாயங்கள் தெரியாமல்

அப்போது கூட யோசித்திருக்கலாம்
வாழ்க்கை என்பது
வலிகள் நிறைந்ததென்பதை

புது உடலுக்குள் புகுந்துவிட்ட ஆனந்தம்
உடல்வலியை மனவலிமையால் வென்றிடலாம்
வாழத்துணிந்தது மனம்
வாழ்க்கையின் இன்னொரு முகம் தெரியாமல்

உடலை வளைத்து
உணர்ச்சிகளைப் பெருக்கி
வாழ்க்கைப் பயணத்தை
வலி இன்றிதான் துவங்கியது மனம்.

சிந்தனைச் சிறகுகள்
விரியும் வரை தெரியவில்லை
வாழ்க்கையின் ஒவ்வொரு அடியும் வலி என்று


தேடலின் வேகத்தில்
ஓடத் துவங்கிய மனம்-
ஒவ்வொரு அடியிலும்
வாங்கியது அடி.


பற்றுப் பாசப் பங்கீட்டில் முட்டி மோதியதில்
வாழ்க்கை வலியின் – அடுத்தடுத்த
அத்தியாயங்கள் ஆரம்பமானது.


பங்கிட்டுக் கிடைப்பது தான் பாசம்


பெற்றோரின் பாசம்
உடன்பிறப்புகளோடு பங்கிட வேண்டும்.


உடன்பிறப்புகளின் பாசம்
அத்தனையிலும் பங்கிட வேண்டும்


"அயலவரின்" பாசம்
அவரவர் பங்குக்கு அற்பத்திலும் சொச்சம்


பங்கிட்டுத் தான் பெற வேண்டுமா பாசத்தை?


யாருக்கும் எதற்கும் பங்கிடாத பாசம்
வேண்டுமென ஏங்கியது மனம்
முதன் முதலில் உணர்ந்தேன்
மன வலியை!

மன வலி

எனக்கு மட்டும்
எனக்கே எனக்காக மட்டும்
ஒரு பாசம் – ஏங்கியது மனம்
ஏங்க ஏங்க
கூடியது வலியும்

உடல் வலித்தால்
வீரிட்டு அழலாம்
மனம் வலிக்கிறது
என்ன செய்வேன்?

வலி
வலியாற்ற வழியில்லா
வலி
உடல்வலி தாங்க
வீரிட்டு அழுது பழகியவனால்
மனவலி தாங்க
நேரிட்டு அழ தெரியவில்லை

வலிக்கு
வடிகால் தான் அழுகை
என் மனவலிக்கோ
அழுகையே தூண்டுகோலாக

பாசாங்குப் பாசங்கள்
பரிகாசமாய் சில ஆறுதல்கள்


ச்சே..
திக்குத் தெரியாமல்
திக்குமுக்காடும்
குருட்டு வாழ்க்கை


வலியோடு
வாழ வெறுத்தவன்
வாழ்வை முடிக்க
வழிதேடினேன்


ம்ம்ம்….
வாழ்வின் முடிவு -
அட அதுகூட
ஒரு வலிதான்.


வலிக்கு வலியே மருந்தா?


மறுத்தது மனம்


வலிக்கு வலியே மருந்தாகுமா?


ஒரு கணத்தில் பிழைத்தேன்
மரணவாசலில் வந்த
மறுபிறவி பயத்தால்


ஒருவேளை
செத்து பிழைத்தால்
மீண்டும் இதே வலிகளா?


அட
இது ஒரு புதுவலி



மறுபிறவி தேடல்
மனவலியை மிஞ்சிய
ஒரு மரணவலி


தவம், தியானம் மன ஒருமுகம்
ஒருங்கே கோர்த்தே
சிந்தனைச் சிறகை விரித்தேன்
சிவலோகம் எனும் பரலோகம் நோக்கி
பறக்கப் பறக்க முற்றியது - பாசம்
பரவுலக வாழ்க்கைமீது


சிந்தனைச் சிறகடித்து
சுதந்திர சூட்சமங்களைச் சுவாசிக்கும் ஆர்வம்
வலி மாய்ந்தது போல ஒரு இன்பம்


பற்றுப் பாவ
பங்கீட்டைத் தாண்டி
இனனும் பறந்தேன் வேகமாக
பரம்பொருள் ரகசியம் தேடி


எல்லை நெருங்கிவிட்ட ஆனந்தம்
கடவுளை நேருக்கு நேர் சந்திக்கும் பதட்டம்
கேள்விகளை ஒத்திகை
பார்த்துக்கொண்டேன் ஒருமுறைகூட


அந்தோ…
சுதந்திர சுற்றுகளை
சுருட்டி முடக்கிய மாயையினின்று
விட்டுப் பிரிந்ததில்
ஒடிந்தது என் சிந்தனை சிறகுகள்.


இங்கு கடவுளை தேடுவது ஒருபுறமிருக்க
முதலில் சிறகொடிந்த நான் எங்கே?


நானே இல்லை என்றால்
நான் எப்படி தேடுவது கடவுளை?
நானும் இல்லை கடவுளும் இல்லை
இனி எங்கே நேருக்குநேர் சந்திப்பு


ஒடிந்தது சிந்தனைச் சிறகுகள் மட்டுமா
என் பரம்பொருள் தேடலும்.


ஒன்றும் அறியாதவன்
எதையோ அறிந்தவ"நாய்" மீண்டேன்

வாழ்க்கை வலிக்கே.
உடல்வலி, உள்ளவலி -இபபோது
எனக்குள் ஆன்ம வலியும்


கண்டவர் விண்டிலர்
விண்டவர் கண்டிலர்


சென்று, கண்டவனுக்கு
விண்டுவதில் குழப்பம்

பெருஞ்சூனியத்தை எப்படி
பேரானந்தம் என்றார்கள்?


நான் போன இடம் தவறா
போன முறை தவறா – இல்லை
போகவே இல்லையா?


அழுது தீர்க்க உடல்வலி
புலம்பி தீர்க்க மனவலி
புதிராய் தவிக்க ஆன்ம வலியோ?


வலிகள் மட்டுமே வாழ்க்கையானால்
வழிவேண்டும் வாழ -அல்லது
வரலாறாய் மாழ


கேலியான நானே
கேள்வியானேன்


நான் யார்?


முடிவுறா வலியோடு
அழுதே முடித்தேன் முதல் சுற்றை.
முடிவிலும் எனக்குள் தொடங்கிய தேடல்


நான் யார்?


எல்லா ஞானிகளும்
யோசித்த அதே யோசனை


தான் தான்
எல்லா மனங்களும்
சொல்லிக்கொண்ட அதே சொல்


எனக்குமேல்
எல்லா மனிதர்களும்

உணர்ந்து கொண்ட அதே உணர்ச்சி


நான்யார்? -என்
உடல் மன ஆன்ம வலிகளின்
உச்ச கேள்வி


புலன் தாண்டி
புறப்பொருள் கூடி
தேடிய அறிவியல்


புலன் அடக்கி
உள்மன உட்கருவில்

உணரத்துடித்த ஆன்மீகம்


புலன் மனம் கோர்த்து
பொருள் கருத்தை
பொருத்திப்பார்த்த தத்துவம்


அறிவியல் ஆன்மீகம் தத்துவம்
மூன்றிலும் தேடினேன்
நான்யார்? கடவுள் யார்?


தெரியாது
தெரிந்து கொள்ளலாம்
அலுத்தது அறிவியல்


உனக்குள் இருக்கிறான்
உணரச்சொன்னது ஆன்மீகம்


நீதான் இறைவன்
அறிவை விளக்கி விவரித்தது தத்துவம்


மூன்றும் சொன்னவையோ
விடைகள்
எனக்குள் விடைகளே
வினாக்களாக


தெரியாது எனில்
அறிவியல் தெரிந்தது
எல்லாம் என்ன?


நான் தான் எனில்
நான் ஏன் தேடுகிறேன் இறைவனை


வினாக்களுக்கு விடைகேட்டேன்
உள்ளுக்குள் உள்ள
அத்தனை வலிகளையும்
ஒருங்கே கோர்த்து


வலி ஆற்ற
வியாபார உலகில்
விற்பனையில் கடவுள்கள்
விதவித கடவுள்கள்


விலைகொடுத்தால்
விரும்பியதை வாங்கிக்கொள்ளலாம்
பணம் அல்லது பற்று – இது தான்
கடவுளின் விலை


விலை தந்து தான்
வாங்க வேண்டுமா
என்னையும் கடவுளையும்
உச்சத்தில் வலித்தது மனம்


கடவுளுக்காக
பற்றை விலை கொடுத்தால்
எப்படி தெரிவேன் நான் யார்? என்பதனை


கடவுள் யார்? நான் யார்?
எது எந்தன் முதன்மை வலி


நானா?, கடவுளா?

யார் முந்தியவர்
முதலில் தேடுவது

யாரை?


கடவுளை தேடிப்போய்
நான் தொலைந்தாலோ
நானை உணரப்போய்
கடவுள் மறைந்தாலோ
எனக்குள் கடவுளை விட
நான் தான் முதன்மை வலி


நான் யார்

விடைதெரியாது விட்டிலாய் திரிந்தவனுக்கு
விளக்காய் ஒரு சுடர்

வாழ்க்கையைத் தொலைத்தவனை
வாவென அழைத்தது "யோகம்"


எனக்குள் வலி ஆற்ற வந்த
அற்ப சொற்ப விடயங்களுள்
யோகமும்ஒன்று- ஆயினும்
ஒன்றாய் நன்றாய்


குருவின் அறிமுகம் – இது
பங்கிடாத பாசம்


பங்கிடாப் பாசமாய்
எனக்குள் படர்ந்தார்
என்னவர்


குரு – இந்த முதல் சுடரே
என் முழுமுதல் விளக்கானது

என்னவரில் காண துடித்தேன்
என்னையும் கடவுளையும்


உணர்ச்சிகள் உசும்ப
உயிரை குடிக்கும்
சுவாச ரீங்காரம்
வலிகளின் வானவில்


விட்டிலாய் சுற்றும் விடலையை
கட்டிப்போட்டது
வீரியம் பூத்த
வாசியின் "வேள்வி"


வசப்பட்டது
என் உணர்ச்சிகள் மட்டுமல்ல

"நானும்"

யோகப்பேரின்பத்தில்
பொங்கியது நான் மட்டுமல்ல
என் உணர்ச்சிகளும்


ஆழமாகப் பூரித்துப்போனஎனக்குள் 
புரிந்தது புதிய ஞானம்

யோகத்தின் அர்த்தங்களை
அசைபோடலானேன்

யோகம் மருத்துவம் மட்டுமல்ல
மானுடம் வெல்லவைக்கும் 
மாபெரும் மகத்துவம்.

"நான்"என் உணர்ச்சிகள்
`எப்போதும் பிரிக்கமுடியா சார்புகள்

"தான்"- இதன் வெளிப்பாடே
என் உணர்ச்சிகள்
– இதன்
உட்கருவே "நான்"
நானின்றி – என்
உணர்ச்சிகள் இல்லை. – என்
உணர்ச்சிகள் இன்றி நானில்லை.


நான் தனின் அறிமுக நுட்பங்களே
என் உணர்ச்சிகள்


உணர்ச்சிகளின் வெளிப்பாடே
சாக்கிரம்,சொப்பனம்,சுழுத்தி

கனவே சொப்பனம்
உறக்கமே சுழுத்தி
விழிப்பே சாக்கிரம்

கனவு,விழிப்பு,உறக்கம்-மூன்றின்
முறையான முடிச்சே வாழ்க்கை.


அவிழ்க்க அவிழ்க்க அவிழ்ந்துகொண்டிருக்கும்
அது தான் வாழ்க்கை.
அறிந்தவன் அணைத்தேன் யோகத்தை
அதற்கப்பாலும் அறிய
அவிழ்ந்தது
என் வலி முடிச்சுகள் மட்டுமல்ல
அறிவின் கருவறைக் கட்டும்.


Saturday, July 7, 2012

ஐன்ஸ்டைனும் ஆன்மீகமும்.






அறிவியலாளர் என்றாலே அவர்களுக்கும் ஆன்மீகத்துக்கும் சுத்தமாக சம்பந்தம் இருக்காது என்றே எண்ணுவார்கள். என்னைப் பொருத்தவரைஅறிவியலும் ஆன்மீகமும் ஒன்றே, இரண்டும் தேடுவது ஒன்றைத்தான், இப்படைப்பின் ரகசியம் என்ன?. அனைத்து ஆன்மீகக் கருத்துக்களும் விவாதத்துக்கு உட்படுத்தப் படவேண்டும் (நான் சொல்லலீங்க, விவேகானந்தர் சொன்னார்.) எது அனைத்துக்கும் சரியாக மனம் ஏற்றுக்கொள்ளும் படி பதில் தருகிறதோ அதுவே உண்மையான மதம் (இதையும் அவர்தாங்க சொன்னாரு). சரி ஐன்ஸ்டைன் மதத்தைப் பற்றி என்ன சொல்றார், இதோ பார்ப்போம்,

ஐன்ஸ்டைன் மதம், கடவுளைப் பற்றிக் கூறுவது இதுதான் : “நமது வலுவற்ற நெஞ்சம் உணரும்படி தாழ்மையுடன் ஞானத்தைத் தெளிவு படுத்தும் ஓர் உன்னத தெய்வீகத்தை மதிப்பதுதான் என் மதம். அறிவினால் அளந்தறிய முடியாத பிரமாண்டமான பிரபஞ்சத்தை உருவாக்கிய மாபெரும் ஒர் ஒளிமயமான மூலசக்தி எங்கும் பரவி யிருப்பதை ஆழ்ந்துணரும் உறுதிதான் என் கடவுள் சிந்தனையை உருவாக்குகிறது.”

சக்தி பற்றி, விவேகானந்த சாமியின் கருத்தும்.....ஐன்ஸ்டின் கருத்தும் இதோ........


பிராணன் எங்கும் நிறைந்த வெளிப்படு சக்தியாக இருக்கிறது. …இந்தப் பிராணனிலிருந்தே நாம் ஆற்றல் என்று அழைக்கிற, நாம் சக்தி என்று அழைக்கிற அனைத்தும் வெளிப்படுகின்றன. புவியீர்ப்பாக, காந்த சக்தியாக வெளிப்படுவது அனைத்தும் பிராணனே. உடல் இயக்கங்களாக, எண்ண சக்தியாக, நாடி ஓட்டங்களாக வெளிப்படுவதெல்லாம் பிராணனே. எண்ணம் முதல் மிகச்சாதாரண சக்தியாக இருப்பவை அனைத்தும் பிராணனின் வெளிப்பாடுகளே.”

-சுவாமி விவேகானந்தர்



"சக்தியே சிருஷ்டியின் அடிப்படை விசை என நான் கருதுகிறேன். என் நண்பர் பெர்குஸன் அதனை எலன் வைட்டால் (elan vital) என அழைக்கிறார். ஹிந்துக்கள் அதனை பிராணன் என்கிறார்கள்.”

-ஐன்ஸ்டைன்

திரைக்கதை வசனம்;பகவான் ராமகிருஷ்ணர்








பரமசிவனும் பார்வதியும் லஞ்ச் முடித்து விட்டு ரிலாக்ஸ் செய்து கொண்டிருந்தார்கள்.

காவக்கு இருந்த பூத கணங்கள் “சாரி, நோ விசிட்டர்ஸ்” என்று யாரையும் உள்ளே அனுப்பவில்லை.

“வர வர எனக்கு பூலோகத்தில் ஒண்ணும் வேலையே இல்லை” என்று அலுத்துக் கொண்டார் பரமசிவன்.

அலுத்துக் கொண்ட சில வினாடிகளுக்குள் பூலோகத்தில் நடக்கும் ஒரு விஷயம் அவர்களது மானிட்டரில் தெரிந்தது.

“வால்யூம் வை” என்றார் பரம்ஸ். பார்வதி வால்யூமை ஜாஸ்தி செய்தார்.

இரண்டு பேர் சேர்ந்து கொண்டு ஒரு ஆளை அடித்துக் கொண்டிருக்க அவன் சமாளிக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்தான்.

“வேலையே இல்லைன்னு அலுத்துக்கிட்டீங்களே. வேலை வந்தாச்சு, கிளம்புங்க”

பரமசிவன் சூலாயுதத்தை எடுத்துக் கொண்டு புறப்பட்டார். போய் சில வினாடிகளுக்குள் திரும்பி விட்டார்.

“என்னாச்சு, அதுக்குள்ள வந்துட்டீங்க?”

“அவனே திருப்பி அடிக்க ஆரம்பிச்சிட்டான். எனக்கு வேலையில்லை. சரணாகதி அடைஞ்சவனைத்தான் நான் காப்பாத்த முடியும்.அதுதான் ரூல்ஸ்”

இரண்டு பேரை சமாளிக்க முடியாமல் அவன் அடிபட்டு மயங்கிக் கீழே விழுந்தான்.

“ம்க்கும்....உங்களால முடிஞ்சது இவ்வளவுதானாக்கும். சரி, நான் மானிட்டரை கொஞ்ச நேரம் ஆஃப் பண்ணிடறேன். நிம்மதியா இருக்கும்” என்று பார்வதி ஆஃப் பண்ணப் போகும் போது இன்னொரு காட்சி.

காட்டு வழியாக இரண்டு நண்பர்கள் போய்க் கொண்டிருந்தார்கள். எதிரில் ஒரு புலி வந்து கொண்டிருந்தது. ஒருவன் துள்ளிக் குதித்து ஓடி மரத்தில் ஏறிக் கொண்டான். நண்பனையும் ‘வாடா’ என்று அழைத்தான்.

ஆனால் அவனோ, ‘நான் கும்பிடுகிற சிவன் என்னைக் கைவிட மாட்டார்’ என்று சொல்லி விட்டு அங்கேயே நின்று கண்மூடிப் பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தான்.

“இப்பவாவது போங்களேன். அவந்தான் எந்த முயற்சியும் பண்ணல்லையே?”

“சான்ஸே இல்லை. அவனும் ஓடிப் போய் மரத்தில் ஏறிக்கலாமே, அதை விட்டுட்டு என்னைக் கூப்பிட்டு என்ன புண்ணியம்?”

இதைப் பரமசிவன் சொல்லிக் கொண்டிருந்த போதே புலி அவனை அடித்துச் சாப்பிட்டு விட்டது.

“நீங்க பண்ற எதுவுமே சரியில்லை. ஒருத்தன் தப்பிக்க முயற்சி பண்ணான். அவன் அடிபட்டே செத்துப் போய்ட்டான். கேட்டா சரணாகதி அடையல...... அவனே திருப்பி அடிக்க ஆரம்பிச்சிட்டான்னு கோபம். இன்னொருத்தன் சரணாகதி அடைஞ்சான். அவன் முயற்சியே பண்ணல்லைன்னு கோபம். என்னதான் நினைச்சிகிட்டு இருக்கீங்க? யு ஹேவ் ஒன்லி ரீஸன்ஸ் ஃபார் நாட் டூயிங் யுவர் ட்யூட்டி” .

“உனக்குப் புரியாது”

“சொல்லுங்களேன், புரிஞ்சிக்க முயற்சி பண்றேன்”

“தன்னாலே முடியாத ஒரு விஷயத்தை, இது என்னாலே முடியாதுன்னு புரிஞ்சிக்கிறதும் அதை ஒப்புக்கிறதும், அதற்குப் பிறகு என்னைக் கூப்பிடறதும்தான் சரணாகதி. அப்படி சரணாகதி அடையும் போது மமதை விலகுகிறது. மமதை இல்லாத இடத்துக்குத்தான் என்னால் போக முடியும். முடியாத ஒண்ணை இது என்னாலே முடியும்ன்னு நினைக்கிற பிடிவாதம் என்னை விலக்கி வெச்சிடும்.”

”ரொம்ப சரி; ஆனா எதிர்ல புலி வரும் போது அந்த ஆள் சரணாகதிதானே அடைஞ்சான், அங்கே எந்த மமதையும் இல்லையே?”

“அந்த இடத்தில் புலி கிட்டயிருந்து தப்பிக்கிறது இயலாத விஷயம் இல்லை. பக்கத்திலிருந்த அவனுடைய நண்பன் தப்பிச்சிப் போய் மரத்தில் ஏறிக்கலையா? தன்னால முடிஞ்ச விஷயங்களுக்கும் என்னை உதவிக்கு எதிர்பார்க்கிறதை நான் எப்பவுமே ஆதரிக்கிறதில்லை.”

“அதுக்காக அவனை சாகடிக்கணுமா?”

“புலியையும் நாந்தானே படைச்சேன்? அதுக்கு உணவு குடுத்தாகணுமே, புலியை எப்படிப் பட்டினி போடுவேன்?”

“இந்த நியாயம் எனக்குப் புரியல்லை”

“இதைப் படிக்கிறவங்க வேறு நியாயங்கள் வெச்சிருக்காங்களான்னு பார்ப்போமே?”

………….ராமகிருஷ்ணரின் உபதேச மொழிகளை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது. 





நன்றி குருஜி!

Friday, July 6, 2012

மீண்டும் ஒரு தேடல் 16



மீண்டும் ஒரு தேடல் 16







ரகசிய தீட்சை பெற்றவர்களின் அனுபவங்கள்


ஓசிரிஸ் கோயிலில் ரகசிய தீட்சை பெற்ற எகிப்தியர்களின் பெயர்கள் வரலாற்றில் பதிவு செய்யப்படவில்லை. ஞானம் பெற்ற அவர்களுக்கு அதுவே போதுமானதாக இருந்தது. அடுத்தவர்களுக்குத் தெரிவிக்கும் அவசியத்தை அவர்கள் உணரவில்லை, அல்லது வரலாற்றை பதிவு செய்வது முக்கியம் என்பதை அவர்கள் முக்கியமாக நினைக்கவில்லை என்று எடுத்துக் கொள்ளலாம்.


ஆனால் பண்டைய கிரேக்க மேதைகள் பலர் ரகசிய தீட்சை பெற்றது அவர்களுடைய வரலாறில் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. அவர்கள் அபுல்லியஸ் (Apulleius), ப்ளேடோ (Plato), ஹோமர் (Homer), பித்தகோரஸ்(Pythagoras), தேல்ஸ் (Thales), லிகர்கஸ் (Lycurgus), சோலோன் (Solon),லம்ப்லிசஸ் (lamblichus), ப்ரோடஸ் (Produs), ப்ளூடார்க் (Plutarch) மற்றும்ஹெரொடோடஸ் (Herodotus).


வரலாற்றின் தந்தை என்று அழைக்கப்படும் ஹெரொடோடஸ் ”ஓசிரிஸ் கோயில் ரகசியங்கள் அனைத்தும் நான் அறிந்தவன் என்றாலும் அவற்றை என் உதடுகள் உச்சரித்து விடாமல் ஆன்மிகப் பிரமாணம் என்னைத் தடுக்கிறது”என்றார். மற்றவர்களும் தாங்கள் எடுத்திருந்த ரகசியப் பிரமாணத்தை மீறவில்லை என்றாலும் அவர்களில் சிலர் ரகசிய தீட்சை உண்மையானது, கடுமையான சோதனைகளுக்குப் பின்னரே தேர்ந்தெடுக்கப்படுவர் போன்றவற்றையும் அந்த அனுபவம் எப்படி இருந்தது என்பது பற்றிய சொல்லக் கூடிய தகவல்களை சொல்லி இருக்கிறார்கள்.


அபுல்லியஸ் என்ற மேதை இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். லத்தினில் பல புத்தகங்கள் எழுதியவர். அவர் படைப்புகளில் முழுமையாக பிற்காலத்தவர்களுக்குக் கிடைத்தது தங்கக் கழுதை (The Golden Ass)என்ற நாவல். லூசியஸ் என்ற அந்த நாவலின் கதாநாயகன், மேஜிக் மற்றும் ரகசிய வித்தைகளை அறிந்து கொள்ளும் ஆவலுடன் இளமையிலேயே பல் வேறு இடங்களுக்குச் சென்று கழுதையாக மாறி விடுகிறான். பிறகு பல கஷ்டங்களுக்குப் பிறகு மனிதனாக மாறி அறிய வேண்டிய ரகசியங்களுள் மிக உயர்ந்த ரகசியம் என்று கருதப்பட்ட ஓசிரிஸ் கோயில் ரகசியத்தை அடைந்து உயர்வதாகக் கதை முடிகிறது. அந்த நாவல் நிஜமும் கற்பனையும் சேர்ந்து எழுதப்பட்ட கதை என்றும் அதில் லூசியஸ் பெற்ற ரகசிய தீட்சை அபுல்லியஸின் சொந்த அனுபவமே என்றும் கருதப்படுகிறது.


லூசியஸ் மூலமாக அவர் இப்படி சொல்கிறார். “நான் தினமும் ஓசிரிஸ் கோயிலின் தலைமை குருவை சந்தித்து எனக்கும் தீட்சை தர வேண்டுவேன். அவர் பெற்றோர் குழந்தைகளிற்கு சில விஷயங்களை மறுப்பது போல பொறுமையுடன் மறுப்பார். எந்த உண்மையும் தகுந்த காலம் வராமல் யாருக்கும் உபதேசிக்கப்படுவதில்லை. யாருக்கு எந்த நேரத்தில் தகுந்த உண்மை உபதேசிக்கப்பட வேண்டும் என்பதை தேவதைகள் மட்டுமே நிர்ணயிக்க முடியும் என்று சொல்வார்.


அந்தப் பேருண்மைகளை அறியாமல் நாட்டுக்குத் திரும்பக் கூடாது என்று விடாப்பிடியாக நான் அடிக்கடி சென்று வேண்டிய போது அவர் சொன்னார். “அளவுக்கு மீறிய அவசரமும், தாமதமும் மனிதனின் உண்மையான எதிரிகள். அவை இரண்டையும் உன்னிடமிருந்து நீக்குவது மிக முக்கியம். உனக்கு சந்தர்ப்பம் வரும் முன் அவசரப்படுவதும், உனக்கு சந்தர்ப்பம் வரும் போது தயார் நிலையில் இல்லாமல் தாமதிப்பதும் கூடாது. எனவே தகுதிகளை வளர்த்துக் கொண்டு பொறுமையாக, தயாராகக் காத்திரு”


இறைவனிடம் அந்த தீட்சைக்காக உளமாரப் பிரார்த்தனை செய்து கொண்டு சில காலம் காத்திருந்த நான் ஒரு நாள் இரவு நேரத்தில் உறக்கத்திலிருந்து விழித்து ஒரு பெரும் உந்துதலால உந்தப்பட்டு நேராக ஓசிரிஸ் கோயிலுக்குச் சென்று தலைமை குருவை சந்தித்தேன். அவர் என்னை எதிர்பார்த்தது போலக் காத்திருந்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவரிடம் என்ன ஆனாலும் சரி நீங்கள் என்னை தீட்சைக்கு அனுமதித்தே ஆக வேண்டும் என்று வேண்டிக் கொண்டேன். அவர் தனக்கும் உத்தரவு வந்து விட்டது என்று கூறி சில உபதேசங்கள் செய்து இன்னும் பத்து நாட்கள் மது, அசைவம் இரண்டையும் விலக்கி மனதையும் சுத்தமாக வைத்திருந்து விட்டு வரும்படி ஆணையிட்டார். 


அப்படியே பத்து நாட்கள் இருந்து விட்டு நான் அங்கு சென்றேன். தீட்சையும் பெற்றேன். அதன் பின் நான் அறிந்தவற்றையும், உணர்ந்தவற்றையும் சொல்ல விடாமல் நான் எடுத்துக் கொண்ட சத்தியப்பிரமாணம் தடுக்கின்றது. முழுமையாகச் சொல்ல முடியாது. சொன்னாலும் மற்றவர்களுக்குப் புரியாது. ஆனால் ஒன்று மட்டும் சொல்வேன். மரணத்தின் விளிம்பு வரை சென்றேன். பல உலகங்களுக்குச் சென்றேன். படைப்பின் பரிமாணங்களை உணர்ந்தேன். இரவிலும் பிரகாசிக்கும் சூரியனைக் கண்டேன். திரும்ப இவ்வுலகத்திற்கு எல்லாம் கண்டவனாக, எல்லாம் உணர்ந்தவனாக வந்தேன்.”


கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் என்று நம் முன்னோர் சுருக்கமாகக் கூறிய அதையே தான் அவரும் இந்த அனுபவத்தில் கூறுகிறார்.


ரகசிய தீட்சை பெற்ற இன்னொரு அறிஞரான ப்ளூடார்க் கூறுகிறார். “ரகசிய தீட்சையின் போது மனித ஆத்மா மரணத்தின் போது அனுபவிக்கும் அத்தனையையும் அனுபவிக்கின்றது. அறிய வேண்டிய அனைத்தையும் அறிகின்றது. ஆனால் ஓசிரிஸ் குறித்து நடந்ததாக சொல்லப்பட்ட கதையை உண்மையாக நடந்தது என்று அப்படியே எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. அந்தக் கதைகள் பாமரர்களுக்காக புனையப்பட்டவை. அவைகளுக்குப் பின்னால் உள்ள தத்துவார்த்தமாக இருக்கும் உண்மைகளைப் புரிந்து கொண்டால் போதும். தீமைகளாலும் தவறுகளாலும் உண்மைகளை அழித்து விட முடியாது. உண்மை பன்மடங்கு பலத்தோடு மீண்டு வரும் என்று அறிந்தால் போதுமானது.”


அதன் பிறகு இன்னொரு இடத்தில் கூறுகிறார். “அறியாமையில் இருந்து மனித ஆன்மா விடுபடுகையில், மகத்தான உண்மைகளை உணரும் போது உருவமில்லாத, மாற்றமில்லாத, பரிசுத்தமான இறைவனை அறியும் போது ஏற்படுகிற பேரானந்தத்தையும், காணும் பேரழகையும் வர்ணிக்க வார்த்தைகள் இல்லை”


லம்ப்லிசஸ் கூறுகிறார். “இறை நிலையிலிருந்த மனிதன் விதியாலும் அறியாமையாலும் பற்பல சங்கிலிகளால் கட்டுண்டு கஷ்டப்படுகிறான். அந்த சங்கிலிகளை உடைத்துக் கொண்டு விடுதலையாகி தன் இறைநிலையை உணரும் நிலைக்கு ஓசிரிஸ் தீட்சை ஒருவரை அழைத்துச் செல்கிறது”


மேலே குறிப்பிட்ட அறிஞர்கள் மட்டுமல்லாமல் பைபிளில் குறிப்பிடப்படும் மோசஸ் கூட ஓசிரிஸ் கோயிலில் ரகசிய தீட்சை பெற்றவர் என்று கூறப்படுகிறது. புதிய ஏற்பாட்டில் பைபிள் “மோசஸ் எகிப்தின் எல்லா ஞானத்தையும் போதிக்கப்பட்டிருந்தார்” என்று கூறுவது முக்கியமாக இந்த ரகசிய தீட்சை ஞானத்தையே என்று சிலர் கூறுகிறார்கள்.


ஒட்டு மொத்தமாகப் பார்த்தால் இந்த உலகத்தில் அவர்கள் மூழ்கியிருந்த அறியாமையை முற்றிலும் விலக்கி விட்டு அவர்கள் இறைவன் படைப்பின் ரகசியங்கள், தத்துவங்களை அனைத்தும் அறிந்து புதிய மனிதர்களாக திரும்பி வந்தார்கள் என்றே சொல்ல வேண்டும்.


ஓசிரிஸ் கோயில் மதகுருக்கள் ரகசிய தீட்சை பெற முடியாத பொதுமக்களையும் புறக்கணித்து விடவில்லை. கடவுள்களையும், வரலாற்று நாயகர்களையும் மையமாக வைத்துப் பல விதமான பழங்கதைகள், நாடகங்கள் படைத்து அவற்றை பொதுமக்களிடையே பரப்பினார்கள். அந்தக் கதைகள் அனைத்தும், ”தீமை தற்காலிகமாக வெல்வது போல தோன்றினாலும், கடைசியில் நிரந்தரமாக வெல்வது நன்மையே” என்ற செய்தியையே கருவாகக் கொண்டிருந்தன. மிக மேலான ஞானத்தைப் பெற முடியாவிட்டாலும், உண்மைக்கு ஒரு போதும் அழிவில்லை, பொய்ம்மையால் என்றும் நன்மை இல்லை என்பது மட்டும் சாதாரண மனிதன் மனத்தில் உறுதியாகப் பதிந்து விட்டால் கண்டிப்பாக பின் அவன் அதற்கு மேற்பட்ட நிலைகளை உணர்ந்து கடைத்தேறுவான் என்பது அவர்கள் நம்பிக்கையாக இருந்தது.


தேடல் தொடரும்




Thursday, July 5, 2012

இறை மனிதன்







நாயின் குணம் நாவிலே
நரியின் குணம் நினைவிலே
பாம்பின் குணம் பல்லிலே
பசுவின் குணம் பாலிலே
படைப்பின் பல குணங்களும்
பாடம் ஏதும் கொள்ளாமல்
பக்குவமாய் பற்றியது
பாவம் இந்த மனிதனுக்கு
பாதி மதி சூடிநி்ற்கும்
பரம சிவன் குணமும்
பாற்கடலில் பள்ளி கொள்ளும்
பரந்தாமன் குணமும்
பாழ்பட்ட மனிதனுக்கு
பல நாளும் தெரியலே
எத்தனையோ இறைகுணங்கள்
ஏராளமாய் இருந்தும்
மனிதன் என்னும் மிருகத்துக்கு
இவை அனைத்தும் இன்னமும்
இருட்டில்தானே மறைந்திருக்கு
எடுத்தியிம்ப சத்குருவும்
இரக்கத்தோடு வந்தால்கூட
இகழ்ந்து விரட்டும் இயல்புதான்
இவன் கொண்ட இழிகுணம்
கூறிவந்த குற்றமெல்லாம்
மிருகத்தின் குணங்களாம்
மனிதனுக்கு என்ன குணம்
மறந்தும் கூட தெரியலே
மறைந்திருக்கும் மனிதகுணம்
மறையோன் மட்டும் அறிவானோ??
எண்குணத்தான் என்பதெல்லாம்
இறைவனுடைய இயற்பெயராம்
இறைவனின் குணம்
இன்னதென்று அறிந்துவிட்டால்
இந்நிலத்தில் நீயே
இறையென்று அறியலாம்
குற்றமற்ற குணம் கொண்டு
கொற்றவனாய் வாழலாம்