14. பின்னர் ஒரு பெரிய வெள்ளை துணியை வைத்து உடலை முழுவதும் போர்த்தி விட்டு "ஓசிரிஸ்" கடவுளின் படத்தை அந்த துணியில் வரைந்து விடுவார்கள்.

Egypt Mummification process..-wrap5.gif

15. கடைசியாக ஒரு பெரிய துணியை எடுத்து போர்த்தி நன்றாக இறுக்கமாக கட்டி, அதன் மேலே படங்கள் வரையப்பட்ட ஒரு மரபலகையை வைத்து மூடி அலங்காரம் செய்யப்பட்ட முதல் பெட்டியினுள் வைத்து மூடி விடுவார்கள். 

Egypt Mummification process..-wrap6.gif

16. அரசர் என்றால் இந்த முதல் பெட்டி கண்டிப்பாக தங்கம் அல்லது வேறு விலை உயர்ந்த பொருள் கொண்டு செய்யப்பட்டதாக தான் இருக்கும். பின்னர் அதை அலங்காரம் செய்யட்ட இரண்டாம் பெட்டிக்குள் வைத்து மூடி விடுவர். 

Egypt Mummification process..-mummy13.gif

17. மம்மி இப்போது தயார் ஆகிவிட்டது. இவ்வளவும் முடிந்து தனது இறுதி பயணத்திற்கு தயாரான மம்மியை உறவினர்கள் மக்கள் பார்வைக்காக வைப்பார்கள்.

Egypt Mummification process..-mourn.jpg

18. அவர்கள் அழுது முடித்து இறுதி சடங்குகள் முடிந்ததும் கடைசியாக "வாய் திறக்கும்" சடங்கு என ஒன்று நடத்தப்படும். அப்போது இறந்தவருக்கு கடைசியாக உணவு தண்ணீர் குடுக்கப்படும்.

Egypt Mummification process..-open.jpg

பின்னர் அலங்கார பெட்டியை எடுத்து கொண்டு இறந்தவர் அரசன் என்றால் அவர் தனகென்று உருவாக்கிய பிரமிட்குள்ளும் மற்றவர் என்றால் அவர்க்குரிய இடத்திலும் வைத்து அவர் உபயோகித்த பொருட்கள், ஆபரணங்கள், உணவு என எல்லாம் வைத்து பிரமிடின் வழியை மூடி விடுவர். 

பல ஆயிரம் வருடங்களுக்கு முன் உருவாக்கிய மம்மிகள் நமக்கு இன்றும் அழியாமல் கிடைத்து ஆராய்ச்சிக்கு உதவியாய் இருப்பதற்கு இதுவே காரணம்.